/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு
/
பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 13, 2025 10:54 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மையூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மனைவி பிரீத்தி, 28.
இவர், நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து, செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில் உள்ள தன் அம்மா வீட்டிற்குச் செல்ல, அரசு பேருந்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கினார்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கச் சென்ற அவர், தன் பையை சோதித்த போது, அதில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. பேருந்தில் வரும் போது, நகை திருடப்பட்டது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.