/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ஆர்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
/
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ஆர்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ஆர்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ஆர்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
ADDED : பிப் 14, 2024 11:29 PM

செங்கல்பட்டு:கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், சாலை விபத்தில் இறந்தார். அதன்பின், அரசு உதவித்தொகை பெற, வாரிசு சான்றிதழ் கோரி, அவரது தந்தை முருகேசன், தாய் எழில்பாவை ஆகியோர், திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, அவரது உறவினர் அசோக்குமார் என்பவர், அப்போதைய நெரும்பூர் குறுவட்ட வருவாய் அலுவலர் காசிம் உசேன், 46, என்பவரிடம் கேட்டபோது, 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், 2013ம் ஆண்டு, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்படி, 2013, டிசம்பர் 3ம் தேதி, அசோக்குமாரிடம் ரசாயனம் தடவிய 1,500 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.
வருவாய் ஆய்வாளரிடம் பணம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து, அவரை கைது செய்தனர். அதன்பின், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, வழக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.
நேற்று, வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வருவாய் ஆய்வாளர் காசிம் உசேனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை கட்டத்தவறினால், மூன்று மாதம் சிறை தண்டனை கூடுதலாக விதித்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். தற்போது, சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், காசிம் உசேன் பணிபுரிந்து வருகிறார்.

