/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை தாசில்தார்கள் 3 பேருக்கு பதவி உயர்வு
/
துணை தாசில்தார்கள் 3 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஏப் 08, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், துணை தாசில்தார்கள் பணியற்றி வந்தனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, பதவி உயர்வு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பரில், 19 துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மூன்று துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.