/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை நடுவே 3 மின்கம்பங்கள் அம்மனுாரில் விபத்து அபாயம்
/
சாலை நடுவே 3 மின்கம்பங்கள் அம்மனுாரில் விபத்து அபாயம்
சாலை நடுவே 3 மின்கம்பங்கள் அம்மனுாரில் விபத்து அபாயம்
சாலை நடுவே 3 மின்கம்பங்கள் அம்மனுாரில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 22, 2025 12:18 AM

செய்யூர், அம்மனுார் கிராமத்தில், விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே உள்ள மூன்று மின்கம்பங்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது.
செய்யூர் அருகே அம்மனுார் கிராமத்தில், செய்யூர் - பவுஞ்சூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
செங்காட்டூர், இரண்யசித்தி, புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில், அம்மனுார் கிராமத்தில் மூன்று மின்கம்பங்கள், சாலையின் நடுவே உள்ளன. இதனால், வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்படும் போது, மின்கம்பத்தில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், இந்த மின்கம்பங்களில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக சாலை நடுவே உள்ள இந்த மூன்று மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.