/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகை, பணம் பறித்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
/
நகை, பணம் பறித்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
நகை, பணம் பறித்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
நகை, பணம் பறித்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
ADDED : ஜன 05, 2025 07:52 PM
திருப்போரூர்:சென்னை ஆவடியை சேர்ந்தவர் தியாகராஜன். 45, அடகுக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு முகநுால் மூலம் திருச்சியை சேர்ந்த சிவா, 35, என்பவர் அறிமுகம் ஆனார். தான் மாந்திரீகம் செய்து வருவதாக பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி தியாகராஜனிடம் 10 லட்சம் ரூபாய் சிவா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை தியாகராஜன், சிவாவிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், சிவா கடந்த மாதம் 31ம் சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளதாகவும், வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் தியாகராஜனிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து தியாகராஜன் தன் நண்பர்கள், மகேந்திரன், ரமேஷ், தினகரன் ஆகியோருடன் 31ம் கோவளத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, சிவாவும் அவருடன் இருந்த 4 நபர்கள் தங்களை தாக்கி, 3.70 லட்சம் ரூபாய் மற்றும் 3 சவரன் நகையை பறித்து கொண்டு, தப்பிச் சென்று விட்டதாக, தியாகராஜன் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அவர்கள் உபயோகிக்கும் மொபைல் போன் சிக்னலை வைத்து, சிவாவுடன் வந்த மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த சேர்ந்தவரும், தற்போது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவருமான குணசேகரன், 47, மற்றும் சக்திவேல், 57, திருவொற்றியூரைச் சேர்ந்த முருகன், 36, ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவா உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.