/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் உவர்ப்பு 3 கிராமத்தினர் தவிப்பு
/
குடிநீர் உவர்ப்பு 3 கிராமத்தினர் தவிப்பு
ADDED : பிப் 15, 2025 07:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ராயல்பட்டு, பூயிலுப்பை, பாலுார் ஆகிய கிராமங்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், குடிநீர் உவர்ப்பாக வருகிறது.
இதனால் பலர், விலை கொடுத்து, 'கேன்' தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.குடிக்கின்றனர்.
வசதியில்லாதவர்கள், ஒரு கி.மீ., துாரம் சென்று, திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலை, முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்குழாயில் வரும் குடிநீரை பிடித்து வருகின்றனர்.
எனவே, இந்த கிராமத்தினருக்கு நல்ல குடிநீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர்.

