/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூதாடிய 35 பேர் கைது ரூ.ஒரு லட்சம் பறிமுதல்
/
சூதாடிய 35 பேர் கைது ரூ.ஒரு லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 04, 2025 11:25 PM
பிராட்வே, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
எஸ்பிளனேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு, பிராட்வே சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் கிளப் ஒன்றில், பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
போலீசாரின் சோதனையில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தர்மபால், 44, வானகரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 70, வியாசர்பாடியைச் சேர்ந்த மனோகரன், 65, பிராட்வேயைச் சேர்ந்த விஸ்வநாதன், 66, முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், 60, உட்பட, 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய், 350 டோக்கன்கள், 470 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.