/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளிக்கு ஆய்வக கருவி வாங்க 37.50 லட்சம் ஒதுக்கீடு
/
அரசு பள்ளிக்கு ஆய்வக கருவி வாங்க 37.50 லட்சம் ஒதுக்கீடு
அரசு பள்ளிக்கு ஆய்வக கருவி வாங்க 37.50 லட்சம் ஒதுக்கீடு
அரசு பள்ளிக்கு ஆய்வக கருவி வாங்க 37.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 06, 2025 09:43 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக கருவிகள் வழங்க வேண்டுமென பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எம்.பி., மற்றும் கலெக்டரிடமும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்யூர், கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிகள், கடப்பாக்கம் பெண்கள் மேல்நிலை பள்ளி, கூவத்துார், சோத்துப்பாக்கம், வெண்ணாங்குபட்டு ஆகிய பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிகள் என, ஆறு பள்ளிகளுக்கு ஆய்வக கருவிகள் வாங்க, தலா 6.25 லட்சம் ரூபாய் என, 37.50 லட்சம் ரூபாய் நிதியை, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி நிதியிலிருந்து, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையேற்று, ஆய்வக கருவிகள் வாங்க, முதன்மை கல்வி அலுவலருக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

