/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பால் கடையின் பூட்டை உடைத்து ரூ.25,000 திருட்டு
/
பால் கடையின் பூட்டை உடைத்து ரூ.25,000 திருட்டு
ADDED : நவ 06, 2025 09:46 PM
பம்மல்:பம்மல், பல்லவன் தெருவை சேர்ந்தவர் ராம் பிரகாஷ், 26. இவர், பம்மலை அடுத்த பொழிச்சலுார், பஜனை கோவில் தெருவில், மூன்று ஆண்டுகளாக பால் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை திறக்க வந்தபோது, கடை ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராம் பிரகாஷ், உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த, 25,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

