/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடைக்கழிநாடு பேரூராட்சியில் 41 தீர்மானங்கள்
/
இடைக்கழிநாடு பேரூராட்சியில் 41 தீர்மானங்கள்
ADDED : அக் 01, 2024 12:28 AM
சித்தாமூர், -செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. கடந்த ஜூலை 22ம் தேதி நடந்த பேரூராட்சி கூட்டத்தில், துணைத் தலைவர் கணபதி, செயல் அலுவலர் மகேஷ்வரனை தாக்கியது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பின், மாதாந்திர கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் மகேஷ்வரன், 32, தலைமையில், நேற்று காலை 12:00 மணிக்கு துவங்கியது.
பேரூராட்சி தலைவர் சம்யுக்தா, 27, துணைத் தலைவர் கணபதி, 50, உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைa பூர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெருவிளக்குகள் அமைப்பது குறித்து, 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.