/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10ம் வகுப்பு பொதுதேர்வு 419 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
/
10ம் வகுப்பு பொதுதேர்வு 419 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 28, 2025 09:44 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 30,468 மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். 419 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.
தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
இதில், அரசு பள்ளிகள் 143, அரசு உதவிபெறும் பள்ளிகள் 40, மெட்ரிக் பள்ளிகள் 173 என, 358 பள்ளிகள் உள்ளன. இதில், 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில், 10ம் வகுப்பில் 13,161 மாணவியர், 15,313 மாணவர்கள் என, மொத்தம் 30,474 மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ் தேர்வு நேற்று நடந்தது. காலை 8:30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்தனர். இதில், 30,468 மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர். 419 மாணவர்கள், தேர்வு எழுத வரவில்லை.
மாவட்டத்தில், மூன்று விடைத்தாள் சேகரிப்பு மையங்களில், விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து தேர்வு மையங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இம்மையங்களில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனனர் என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.