ADDED : செப் 09, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவிலில் வங்கியில் இருந்து 49,000 ரூபாய் எடுத்த சென்ற பெண்ணிடம் பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா, 52.நேற்று மதியம் 12:30 மணிக்கு சிங்க பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் தன் கணக்கில் இருந்து 49,000 ரூபாயை எடுத்துக்கொண்டு அனுமந்தபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவனையில் சென்று பார்த்த போது கைப்பையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கைப்பையை கிழித்து திருடிச் சென்றது தெரிய வந்தது .
இது குறித்த புகாரையடுத்து, மறைமலை நகர் குற்றவியல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.