/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுராந்தகத்தில் 50 பேர் மனு
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுராந்தகத்தில் 50 பேர் மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுராந்தகத்தில் 50 பேர் மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுராந்தகத்தில் 50 பேர் மனு
ADDED : நவ 22, 2024 12:17 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம், வட்டாட்சியர் துரைராஜன் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார்.
அச்சிறுபாக்கம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில், பழுதாகியுள்ள பாசன மதகு மற்றும் ஏரி உபரி நீர் வெளியேறும் கலங்கல், பாசன கால்வாய் பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
சீவன் சம்பா நெல் ரகம் மற்றும் தர்பூசணி விதைகளை, விவசாயிகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்யும் முன், தோட்டக்கலை துறை அதிகாரிகள், அவற்றின் முளைப்பு தன்மையை பரிசோதித்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், மின் பற்றாக்குறை உள்ள இடங்களில், கூடுதல் மின் மாற்றி மற்றும் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் மழை நீர் கால்வாய்களை சீரமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.
இதில், பொதுப்பணி, வேளாண்மை, தோட்டக்கலை, மின்வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் என, அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.