/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் சிறப்பு முகாம்களில் 61,650 விண்ணப்பங்கள் பதிவு
/
வாக்காளர் சிறப்பு முகாம்களில் 61,650 விண்ணப்பங்கள் பதிவு
வாக்காளர் சிறப்பு முகாம்களில் 61,650 விண்ணப்பங்கள் பதிவு
வாக்காளர் சிறப்பு முகாம்களில் 61,650 விண்ணப்பங்கள் பதிவு
ADDED : நவ 26, 2024 02:31 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, சிறப்பு சுருக்கமுறை வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்பின், அக்., மாதம் 16, 17 மற்றும் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு கோரி ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இம்முகாம், வரும் 28ம் தேதி நடந்தது.
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் 12,831 பேர், பல்லாவரம் சட்டசபை தொகுதியில் 6,326 பேர், தாம்பரம் சட்டசபை தொகுதியில் 6,469 பேர், செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் 4,619 பேர், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் 4,460 பேர், செய்யூர் - தனி சட்டசபை தொகுதியில் 3,225 பேர், மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 3,385 பேர் என, 41,315 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.