/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் மீது மோதிய கார் 5 வயது சிறுவன் பலி
/
பைக் மீது மோதிய கார் 5 வயது சிறுவன் பலி
ADDED : ஜூலை 15, 2024 12:58 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மோசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 32; பெட்ரோல் 'பங்க்' ஊழியர். இவரது மனைவி சுகன்யா, 31, மகன் சுமன், 5.
முருகன் குடும்பத்துடன், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று மாலை செங்கல்பட்டில் உள்ள கடைக்கு 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பின், பழைய ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு நீதிமன்றம் வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த 'இன்னோவா' கார், முருகனின் பைக்கில் மோதியது.
இந்த விபத்தில், சிறுவன் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். முருகன் மற்றும் சுகன்யா சிறு காயங்களுடன் தப்பினர். செங்கல்பட்டு நகர போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு நகர காவல் நிலையம் வந்த முருகனின் உறவினர்கள் மற்றும் மோசிவாக்கம் கிராமத்தினர் 50க்கும் மேற்பட்டோர், காவல் நிலையம் எதிரில் பழைய ஜி.எஸ்.டி., சாலையில் கூடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.