/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
50 நாள் குழந்தை மீது தலையணை விழுந்ததால் மூச்சுத்திணறி பலி
/
50 நாள் குழந்தை மீது தலையணை விழுந்ததால் மூச்சுத்திணறி பலி
50 நாள் குழந்தை மீது தலையணை விழுந்ததால் மூச்சுத்திணறி பலி
50 நாள் குழந்தை மீது தலையணை விழுந்ததால் மூச்சுத்திணறி பலி
ADDED : அக் 18, 2024 09:15 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் எம்.ஜி.ஆர்., தெருவில் வசிப்பவர் பார்த்திபன், 32. ஆட்டோ ஓட்டுனர். இவரின் மனைவி பவானி, 30. தம்பதிக்கு, அனுஷா, 13, சாய் சரண், 10, என, இரண்டு குழந்தைகள்.
இந்நிலையில், மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்து, 50 நாட்கள் ஆகிறது. லோகமித்ரன் என பெயரிடப்பட்ட இந்த குழந்தை, தாயின் அருகில் நேற்று துாங்கிக்கொண்டிருந்தது.
கட்டிலில் இருந்து புரண்டு, குழந்தை கீழே விழாமல் இருக்க, பக்கவாட்டில் கனமான தலையணைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதில், சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு தலையணை, குழந்தையின் முகத்தில் விழுந்துள்ளது. இதனால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியது.
சிறிது நேரம் கழித்து, இதை பார்த்த பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொ்டு சென்றனர்.
அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.