/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்லாவரம் சந்தையில் வியாபாரிகளால் சலசலப்பு
/
பல்லாவரம் சந்தையில் வியாபாரிகளால் சலசலப்பு
ADDED : பிப் 17, 2024 01:39 AM
பல்லாவரம்:பல்லாவரம், பழைய டிரங்க் சாலையில், வெள்ளிக் கிழமைதோறும் சந்தை நடக்கிறது. சாலையின் இருபுறத்தில் மட்டுமே கடைகள் போட, கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதை மீறி, சாலையின் நடுவிலும் கடைகள் போடப்படுகின்றன.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், வாரச்சந்தை நாளான நேற்று, சாலையின் நடுவில் போடப்பட்ட கடைகளை அகற்ற கண்டோன்மென்ட் அதிகாரிகள் முயன்றனர்.
வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வந்து பேச்சு நடத்தினர். அடுத்த வாரம் முதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவில் கடைகளை போடக்கூடாது என எச்சரித்தனர்.
இதையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.