/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டாக துார்வாரப்படாத கால்வாய் குரோம்பேட்டை ராதா நகரில் பாதிப்பு
/
10 ஆண்டாக துார்வாரப்படாத கால்வாய் குரோம்பேட்டை ராதா நகரில் பாதிப்பு
10 ஆண்டாக துார்வாரப்படாத கால்வாய் குரோம்பேட்டை ராதா நகரில் பாதிப்பு
10 ஆண்டாக துார்வாரப்படாத கால்வாய் குரோம்பேட்டை ராதா நகரில் பாதிப்பு
ADDED : டிச 16, 2024 03:45 AM

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், சாந்தி நகர் வழியாக பல்லாவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயை, பொதுப்பணித் துறையினர் 10 ஆண்டுகளாக துார்வாராததால், ஒவ்வொரு மழைக்கும், அப்பகுதிவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், குரோம்பேட்டை சாந்தி நகர் - நாயுடுஷாப் சாலைகள் - ஜி.ஜி.என்., பள்ளி பின்புறம் வழியாக பல்லாவரம் பெரிய ஏரிக்கு கால்வாய் செல்கிறது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கால்வாயின் அகலம், ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றாற்போல், 8 அடி முதல் 15 அடி வரை உள்ளது.
மழை காலத்தில், வெற்றி தியேட்டர், வைஷ்ணவா ரயில்வே கேட் அருகே தேங்கும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக ஏரிக்கு செல்லும். மேலும், குரோம்பேட்டை ராதா நகர் மற்றும் சாந்தி நகர்களில் உள்ள, 30க்கும் மேற்பட்ட உட்புற கால்வாய்களின் வழியாக வரும் தண்ணீர், இந்த கால்வாயில் தான் கலக்கிறது.
முக்கியமான இக்கால்வாயை முறையாக துார்வாரி, 10 ஆண்டுகள் ஆவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவ்வப்போது, மாநகராட்சி மேலோட்டமாக துார்வாரினாலும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர் இதுவரை அடியோடு துார்வாரவில்லை.
இதனால், ஒவ்வொரு மழையின் போதும், கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி, குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சூழ்கிறது.
மழையின் போது, குரோம்பேட்டை பகுதி பாதிக்கப்படுவதை தவிர்க்க, இக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக துார்வார வேண்டும்.
மேலும், கால்வாயின் மேற்பகுதியில் ஷிலாப் பொருத்தி மூட வேண்டும் என, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

