தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்திக்கு புது முயற்சி!தினமும் 450 யூனிட் வரை வினியோகிக்க திட்டம்

இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்திக்கு புது முயற்சி!தினமும் 450 யூனிட் வரை வினியோகிக்க திட்டம்

இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்திக்கு புது முயற்சி!தினமும் 450 யூனிட் வரை வினியோகிக்க திட்டம்


UPDATED : செப் 28, 2026 03:00 AM

ADDED : செப் 27, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 03:00 AM ADDED : செப் 27, 2026 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இறைச்சி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் மறைமலை நகராட்சிக்கு 450 யூனிட் வரை மின்சாரம் வினியோகிக்க வாய்ப்புள்ளது. இந்த பணிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிவடைந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நகராட்சி 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டுகளை கொண்டு உள்ளது.

அரசு பதிவேடுகளின்படி தற்போது 27,648 குடியிருப்புகளில், 1.10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள முக்கிய சாலைகளில் 450க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், கடைகள் உணவகங்கள், உள்ளிட்டவை உள்ளன. மறைமலை நகர் சிப்காட் பகுதியில் 270க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நகராட்சியில், தினமும் 33.18 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.

மறுசுழற்சி

இவற்றில் மட்காத குப்பையை தரம் பிரித்து தனியார் நிறுவனங்கள் மறு சுழற்சிக்காக வழங்கப்படுகிறது. மட்கும் குப்பை அடிகளார் சாலை, மட்டாண ஓடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உரக்கூடங்களில் அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மறைமலை நகர் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஜி.எஸ்.டி., நெடுஞ்சாலை, நின்னகரை, கூடலுார் ஏரி மற்றும் வனப்பகுதிகளில் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து வாகன ஓட்டிகளும் பொது மக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, 2024- -2025ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இறைச்சி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

செ ங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக மறைமலை நகர் நகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செரிமான தொட்டி

இதற்காக, அடிகளார் சாலையில் உள்ள உரக்கிடங்கில் மின்சாரம் தயாரிக்க, உயிரி வாயு மற்றும் இயற்கை உர ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5 டன் கொள்ளவுடன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கழிவுகள் பிரேத்யகமாக அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி அரைக்கப்பட்டு 'கன்வேயர் பெல்ட்' மூலம் செரிமான தொட்டிக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு அரைக்கப்பட்ட கழிவு கூழாக மாற்றி கொள்கலனுக்கு குழாய் மூலம் அனுப்பி சேகரிக்கப்படும்.

அரைக்கப்பட்ட கூழ் மீத்தேன் வாயுவாக உருமாற்றப்பட்டு, அந்த வாயு மின்சாரமாக உற்பத்தியாகி மின் சேகரிப்பு கலனிற்கு பேட்டரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் சேகரிக்கப்படும்.

5 டன் அளவு கொண்ட இயந்திரத்தில் முழுமையாக நிரப்பி இயக்கும்போது, அதிலிருந்து 415 யூனிட் முதல் 450 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும்.

இந்த மின்சாரத்தை குப்பை கழிவுகளை அரைக்கவும், தெருவிளக்குகள், உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்த முடியும்.

இம்மாத இறுதிக்குள்செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த திட்டம் செயல்படுத்துவதால் மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு ஏற்பட்டு வரும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு போன்றவை தடுத்து நிறுத்தப்படும்.

வணிகர்கள் மற்றும் பொது மக்களும் இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us