/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடம்பாடி - புதுச்சேரி சாலைக்கு விடிவு வெள்ளநீர் செல்ல அகல பாலம் அமைப்பு
/
கடம்பாடி - புதுச்சேரி சாலைக்கு விடிவு வெள்ளநீர் செல்ல அகல பாலம் அமைப்பு
கடம்பாடி - புதுச்சேரி சாலைக்கு விடிவு வெள்ளநீர் செல்ல அகல பாலம் அமைப்பு
கடம்பாடி - புதுச்சேரி சாலைக்கு விடிவு வெள்ளநீர் செல்ல அகல பாலம் அமைப்பு
ADDED : பிப் 22, 2024 10:30 PM

மாமல்லபுரம்,மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடம்பாடியில் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்படாமல் தவிர்க்க, அகலமான பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தடத்தில், நான்குவழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடம்பாடி பகுதியில் உள்ள முந்தைய கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்கின்றன.
புதிய சாலைக்காக, சாலையின் இருபுறம் பள்ளம் தோண்டி, மண் நிரப்பி சமன் செய்யப்பட்டது. இங்கு, ஏற்கனவே இருந்த சிறுபாலம், கடந்த டிச., மாத 'மிக்ஜாம்' புயல் கனமழை வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், பழைய மற்றும் விரிவாக்கப்படும் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.
இதனால், மாமல்லபுரம் - புதுப்பட்டினம் இடையே, இரண்டு நாட்கள் போக்குவரத்து முடங்கியது. சுற்றுப்புற பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர், இச்சாலை பகுதியில் உள்ள கால்வாய்கள் வழியே, பகிங்ஹாம் கால்வாய்க்கு பாயும்.
கடந்த 2015 வெள்ளப்பெருக்கின் போது, சாலையின் குறிப்பிட்ட நீள பகுதியை மூழ்கடித்து, பகிங்ஹாம் கால்வாய்க்கு பாய்ந்தது. இதனால், குறுகிய கால்வாய்கள் வழியே வெள்ளம் கடக்க முடியாமல் மூழ்கடிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதையடுத்து, சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தவிர்க்க, விரிவாக்க சாலையில் அமைக்கப்பட்ட சிறிய பாலத்தை அகற்றி, தற்போது மழைநீர் அதிகம் கடக்கும் வகையில், அகல பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கும் சாலையிலும், அகலமான பாலம் அமைய உள்ளது.