/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அம்மன் கோவில்களில் ஆடிப்பெருவிழா துவக்கம்
/
அம்மன் கோவில்களில் ஆடிப்பெருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 21, 2025 01:53 AM

திருப்போரூர்:நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா கோலாகலமாக துவங்கியது.
திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பத்தில், வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், ஆடித்திருவிழா ஏழு வாரங்கள் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான முதல் வார விழா நேற்று நடந்தது. விழாவில், வேண்டவராசி அம்மனுக்கும், நெல்லியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீப துாப ஆராதனைகள் நடந்தன.
வரும், 27ம் தேதி நடக்கும் இரண்டாவது வார விழாவில், மூலவர் அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம், 308 பால்குடம் அபிஷேகமும், கூட்டு வழிபாடு, கூழ்வார்த்தல் விழாவும் நடைபெற உள்ளது.
அதேபோல், மேட்டுத்தண்டம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா நடந்தது.