/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
/
மாமல்லை கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : செப் 20, 2024 08:36 PM
மாமல்லபுரம்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் உடும்பன் என்கிற ரூபன், 25. மாமல்லபுரம் குதிரை உரிமையாளரிடம், கடற்கரையில் குதிரையில் பயணியரை சவாரி அழைத்துச் செல்லும் தொழில் செய்தார்.
அவரிடம் குதிரை ஓட்டிய மற்ற தொழிலாளர்கள், பயணியரிடம் சவாரிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொண்டு, குறைவான தொகையையே தங்களிடம் அளிப்பதாக, ரூபன் உரிமையாளரிடம் புகார் கூறினார்.
அதனால் ஆத்திரமடைந்த பிற தொழிலாளர்கள், கடந்த ஆண்டு அக்., 21ம் தேதி, கடற்கரை கோவில் அருகில், கடற்கரையில் ரூபனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மாமல்லபுரத்தைச் சேர்ந்த பாலாஜி, 24, மற்றும் சதீஷ்குமார், 23, பட்டிப்புலத்தைச் சேர்ந்த அருளேஷ், 20, மற்றும் கார்த்தி, 20, ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புள்ள சென்னை நுங்கப்பாக்கத்தைச் சேர்ந்த பாபு என்கிற வீரபத்திரன், 28, என்பவர், ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சென்னை பகுதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து, வேறு பகுதியில் வசித்து வந்தது தெரிந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, கோவளம் பகுதியில் அவரை சுற்றி வளைத்து கைது செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.