/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்
/
சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்
சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்
சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : ஜன 18, 2024 01:43 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் வில்லியம்பாக்கம், குருவன்மேடு, பாலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழில்.
இங்கு நெல், வாழை, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என 4,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.
கடந்த மாதம் பெய்த மழையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் தற்போது, விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்டை வெட்டுதல், உழவு உழுதல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குருவன்மேடு, சாஸ்திரம்பாக்கம் பகுதியில் ஏரி பாசனத்தில் நவரைப்பட்டம் பயிரிடப்படுகிறது. இதில் நேரடி நெல் விதைத்தல் மற்றும் நடவு முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் மூன்று போகம் பயிரிடப்பட்டது. தற்போது ஒரு போகமாக குறைந்து உள்ளது. சுற்றி உள்ள கொளத்துார், வெண்பாக்கம் கிராமங்கள் நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் நாற்று விட்டு நடவு செய்யும் பழைய முறையே பின்பற்றுகிறோம்.
செலவு கூடுதலாக இருந்தாலும் நாற்று நல்ல வளமாக வளரும் என, இந்த முறையை பின்பற்றுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.