/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2025 02:07 AM

திருப்போரூர்:திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க., அரசை கண்டித்தும், திருப்போரூரில் நேற்று, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை வகித்தார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கம் கிராமத்தில் சர்வே எண் 38/1, 236/ 1ல், 50 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
திருப்போரூர்- - நெம்மேலி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருப்போரூரில் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர் குமரவேல் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்போரூர் நகர செயலர் சிவராமன் நன்றி கூறினார்.
இ.கம்யூ., போராட்டம்
திருப்போரூர் ரவுண்டானா அருகே நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 பேர் குவிந்தனர்.
விலைவாசி உயர்வு, 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஓ.எம்.ஆர்., சாலை, ரவுண்டானாவிலிருந்து, இந்தியன் வங்கி வரை பேரணி சென்றனர்.
வங்கி எதிரே மறியல் செய்ய முயன்ற 200 பேரை, திருப்போரூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலை விடுவித்தனர்.
திருப்போரூரில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இரு கட்சிகள் மறியல், பேரணியால், சலசலப்பு ஏற்பட்டது.