ADDED : செப் 17, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
அப்போது, கத்தார் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 317 பேருடன் வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.இதையடுத்து, விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல, லண்டன், சார்ஜா, துபாய் விமானங்களும், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன. பின் வானிலை சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து தாய்லாந்து, சார்ஜா, அபுதாபி, லண்டன், டில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள், ஒரு மணி நேரம் தாமதாக புறப்பட்டு சென்றன.