/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
/
அரசு அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 22, 2024 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்:சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆரில் வார்டு அலுவலகம் உள்ளது. அதை ஒட்டி, பல்நோக்கு மைய கட்டடம் உள்ளது. இதில், நகர நலவாழ்வு மையம் செயல்பட உள்ளது.
பேருந்து வசதி உள்ள பகுதியானதால், இந்த கட்டடத்தில் முதல் மாடியில் கட்டடம் கட்டி, தேவையான அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில் இருந்து, கூடுதல் கட்டடம் கட்ட, 37.60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும் என அதிகாரிகள் கூறினர்.