/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பள்ளியை சூழ்ந்த பெற்றோரால் பரபரப்பு
/
தனியார் பள்ளியை சூழ்ந்த பெற்றோரால் பரபரப்பு
ADDED : மார் 05, 2024 11:42 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்த எஸ்டென்சியாவில், வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில், நேற்று முன்தினம் யு.கே.ஜி., மாணவியை, பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தவறான எண்ணத்துடன் தொட்டதாக, மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, இரு ஆசிரியர்கள் மீதும் 'போக்சோ' வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில், நேற்று முன்தினம் அடைத்தனர்.
தொடர்ந்து, அப்பள்ளியில் படித்து வரும் மாணவியரின் பெற்றோர், 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பள்ளியில் திரண்டு, தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சு நடத்தினர்.
பள்ளியை பெற்றோர்கள் சூழ்ந்ததை அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், பள்ளிக்கு விரைந்து வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

