/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா துறை விருதுகள் 30 வரை விண்ணப்பிக்கலாம்
/
சுற்றுலா துறை விருதுகள் 30 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 16, 2025 10:48 PM
மாமல்லபுரம்:தமிழக சுற்றுலாத்துறை விருதுகளுக்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த, 2022 முதல், சர்வதேச சுற்றுலா தினமான செப்., 27ம் தேதி, சிறந்த நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.
இவ்விருது, சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி, விடுதி, உணவகம் உள்ளிட்ட 15 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், கடந்த 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர். ww.tntourismawards.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, 91769 95869 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.