/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக நீதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
சமூக நீதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 03, 2024 08:26 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூக நீதிக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
சமூக நீதிக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில், கடந்த 1995ம் ஆண்டு முதல் தமிழக அரசால், 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாயும், 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
இவ்விருதாளரை, தமிழக முதல்வர் தேர்வு செய்வார். அதன்படி, 2024ம் ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுய விவரம், சமூக நீதிக்கான பணிகள் அடங்கிய விண்ணப்பத்தை, செங்கல்பட்டு கலெக்டருக்கு, வரும் 20ம் தேதிக்குள் அனுப்பலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.