/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்பு குப்பை தொட்டிகள் பராமரிக்கப்படுமா?
/
இரும்பு குப்பை தொட்டிகள் பராமரிக்கப்படுமா?
ADDED : செப் 30, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ ச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில், குப்பை சேகரிக்க 10க்கும் மேற்பட்ட இரும்பு தொட்டிகள் வைக்கப்பட்டன. தற்போது இந்த குப்பை தொட்டிகள், பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.
அந்த வகையில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பின்புறம் உள்ள குளத்தில் விழுந்து, வீணாகி வருகிறது.
குப்பை தொட்டிகளை முறையாக பராமரித்து, குப்பை சேகரிக்க பயன்படுத்த, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிஹர பூபாலன்,
தண்டரை புதுச்சேரி.