/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் 'சிசிடிவி' கண்காணிப்புக்கு ஏற்பாடு
/
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் 'சிசிடிவி' கண்காணிப்புக்கு ஏற்பாடு
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் 'சிசிடிவி' கண்காணிப்புக்கு ஏற்பாடு
புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் 'சிசிடிவி' கண்காணிப்புக்கு ஏற்பாடு
ADDED : நவ 10, 2024 07:29 PM
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தலில், முறைகேடுகள் மற்றும் அத்துமீறல் நடக்கலாம் என்பதால், 'சிசிடிவி' கண்காணிப்பு, போலீஸ் பாதுகாப்புமமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி துறையின் கல்பாக்கம் பகுதியுடன் ஒருங்கிணைந்ததாக, புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி உள்ளது. கல்பாக்கத்தில் வசிப்பவர்களுக்கு, புதுப்பட்டினம் பிரதான வர்த்தக இடமாக விளங்குகிறது.
இந்நிலையில், இங்கு செயல்படும் வணிகர் சங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்துள்ள இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக, பல ஆண்டுகளாக அ.தி.மு.க., பிரமுகர் காதர் உசேன் உள்ளார்.
அவருக்கு எதிரான ஒரு தரப்பினர், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டுமென, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, நாளை தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
தற்போதைய தலைவர் காதர் உசேன் மற்றும் முஹம்மது சலாஹுதீன் ஆகிய இருவர் மட்டுமே, தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பி வேட்புமனு அளித்துள்ளனர்.
இச்சூழலில், தலைவர் பதவி தேர்தல் நடத்த வலியுறுத்திய தரப்பினர், தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர். அதே வேளையில், புதுப்பட்டினம் அனைத்து வணிகர்கள் சங்கம் என, புதிய சங்கத்தை தோற்றுவித்து, விளம்பர பதாகையும் அமைத்துள்ளனர்.
நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மோதல், அத்துமீறல் நடக்கலாம் என தெரிகிறது. எனவே, 'சிசிடிவி' கண்காணிப்புடன் நடத்த, சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், கல்பாக்கம் போலீசாரிடம் பாதுகாப்பும் கோரியுள்ளனர்.