/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 மாதமாக நிறுத்தப்பட்ட சாலை பணி அத்திவாக்கம் கிராமத்தினர் தவிப்பு
/
3 மாதமாக நிறுத்தப்பட்ட சாலை பணி அத்திவாக்கம் கிராமத்தினர் தவிப்பு
3 மாதமாக நிறுத்தப்பட்ட சாலை பணி அத்திவாக்கம் கிராமத்தினர் தவிப்பு
3 மாதமாக நிறுத்தப்பட்ட சாலை பணி அத்திவாக்கம் கிராமத்தினர் தவிப்பு
ADDED : மே 07, 2025 01:57 AM

சித்தாமூர்:அத்திவாக்கத்தில், மூன்று மாதங்களாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதால், கிராமத்தின்ர அவதிப்படுகின்றனர்.
சித்தாமூர் அடுத்த மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கண்டை ஊராட்சி, அத்திவாக்கம் கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் பிரதான சாலையான ராஜிவ்காந்தி சாலை, கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 1.7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள், சாலை அமைக்கப்படும் இடம் தங்களின் பட்டா இடத்தில் வருவதாகக் கூறி, கட்டுமானப் பணிகளை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஜல்லிகள் நிரவப்பட்ட நிலையில், சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த கரடுமுரடான சாலையில் கடந்து செல்ல, பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் பாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.