/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பார்க்கிங்காக மாறிவரும் அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்
/
பார்க்கிங்காக மாறிவரும் அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்
பார்க்கிங்காக மாறிவரும் அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்
பார்க்கிங்காக மாறிவரும் அணுகு சாலை தாம்பரம் மேம்பாலத்தின் கீழ் அட்டூழியம்
ADDED : பிப் 18, 2025 11:49 PM

தாம்பரம், தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன..
இரும்புலியூரில் இருந்து வந்து ஏறும் போது, மேம்பாலத்தில் கீழ் உள்ள அணுகு சாலை, தற்போது வாகன நிறுத்தமாக மாறி வருகிறது.
தாம்பரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருவோர், தங்களின் கார், இருசக்கர வாகனங்களை, சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்திச் செல்கின்றனர்.
அந்த வகையில், பல மீட்டர் துாரத்திற்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அச்சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எதிரெதிரே வரும் வாகனங்கள் கடக்க வழியின்றி, நீண்ட நேரம் நெரிசல் தொடர்கிறது.
அணுகு சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது; மீறி நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீஸ் சார்பில், எச்சரிக்கை பலகை வைத்தும், வாகன ஓட்டிகள் அதை மதிக்கவில்லை.
அதே நேரத்தில், அறிவிப்பு பலகை வைத்ததோடு, போலீசார் அதை கண்டுகொள்ளவும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், அணுகு சாலை முழுதும் தனியார் வாகன பார்க்கிங் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.
போலீஸ் உயர் அதிகாரிகள், இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

