/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் 15ல் பல வகை உரிமம் ஏலம்
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் 15ல் பல வகை உரிமம் ஏலம்
ADDED : ஜூலை 09, 2025 09:04 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பல வகை உரிமங்களுக்கான ஏலம், வரும் 15ம் தேதி நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள, வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், கோவில் வளாக தென்னை மரங்கள் மேல் மகசூல், கோவில் மற்றும் மலையடிவாரத்தில் தேங்காய், வாழை, மலர், வெற்றிலை பாக்கு வியாபாரம்.
மலைக்கோவில், பக்தவச்சலேஸ்வரர் ஆகிய கோவில்களில் பூஜை பொருட்கள் வியாபாரம், பிரசாத வியாபாரம், ஈமச்சடங்கு முடி சேகரித்தல் ஆகியவற்றுக்கான உரிமம் வழங்க ஏலம் நடத்தப்படும்.
தற்போது, ஜூலை 1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, இந்த உரிமங்களுக்கான ஏலத்தை, கடந்த 1ம் தேதி நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், அன்று நடத்தப்படவில்லை. இதையடுத்து, வரும் 15ம் தேதி ஏலம் நடத்த உள்ளதாக, கோவில் நிர்வாம் தெரிவித்துள்ளது.