/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
/
மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 03, 2024 08:19 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம், குபேரன் நகர் இரண்டாவது தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, நிதியியல் கல்வி மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு முகாம், நேற்று மாலை நடந்தது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து, இந்த சிறப்பு முகாமை நடத்தின. இதில், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று, பெருகி வரும் சைபர் குற்றங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழக்காமல், பாதுகாப்பாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என, எடுத்துரைக்கப்பட்டது.
இதில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் நந்திவரம் - கூடுவாஞ்சேரி கிளை வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.