/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை தடுப்பு செங்கையில் விழிப்புணர்வு
/
போதை தடுப்பு செங்கையில் விழிப்புணர்வு
ADDED : ஜன 27, 2025 11:11 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, புதிய பேருந்து நிலையம் அருகில் முடித்தனர்.
கலை குழுவினர் வாயிலாக, விழிப்புணர்வு நாடகமும் நடந்தது. போதை, மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். இதில், கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.