/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் முதலாமாண்டு சம்வஸ்தரம்
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் முதலாமாண்டு சம்வஸ்தரம்
ADDED : பிப் 15, 2025 07:57 PM
மாமல்லபுரம்:பாலா பீடம் சார்பில், பாலா லலிதா பரமேஸ்வரி அம்ச அவதாரமான பாலா திரிபுரசுந்தரிக்கு, மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், புதிதாக கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பாலா திரிபுரசுந்தரி மற்றும் லலிதா பரமேஸ்வரி, தேவி கருமாரி, வல்லப கணபதி, பாலமுருகன் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்று, ஓராண்டு கடந்த நிலையில், முதலாம் ஆண்டு சம்வஸ்தர ஆண்டு விழா, நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது.
மாலை, திரிபுரசுந்தரி வீதியுலா சென்றார். தொடர்ந்து, கே.எஸ்.கிருஷ்ணா, கே.எஸ்.ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இரவு ஆரத்தியைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

