/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெண்காட்டீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
/
வெண்காட்டீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
ADDED : ஜன 20, 2025 01:51 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், 1,000 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் உடனுறை வெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக நேற்று, பந்தக்கால் நடப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த கோவில் பணிகள், தற்போது முடிந்தன.
இதையடுத்து, பிப்., 10ம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு, பந்தக்கால் நடப்பட்டது.
இப்பணியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் உபதாரர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.