/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பீச் வாலிபால் ஜனவரியில் நடக்குது
/
பீச் வாலிபால் ஜனவரியில் நடக்குது
ADDED : டிச 19, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை கானத்துாரில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, வரும் ஜன., 3 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில், தென் மண்டல அளவில் 104 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன.
அதேபோல், அமெட் பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் மற்றும் பீச் 'ரெஸ்லிங்' போட்டிகள், ஜனவரி 17 - 19ம் தேதிகள் வரை நடக்கின்றன. இப்போட்டிகளில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாபெரும் விளையாட்டு போட்டிகளில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.