/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய அங்கன்வாடி கட்ட பூமி பூஜை
/
புதிய அங்கன்வாடி கட்ட பூமி பூஜை
ADDED : பிப் 04, 2025 07:28 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பேர் கண்டிகை ஊராட்சி உள்ளது.
இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய அங்கன்வாடி கட்டடம், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், இடித்து அகற்றப்பட்டது.
தற்காலிகமாக அங்கன்வாடி மையம், 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மாற்றுக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க, கிராமத்தினர் வலியுறுத்தினர்.
பின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், 2024 - 25ல் புதிய அங்கன்வாடி மையம் கட்ட, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 16.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்தது.