/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
ADDED : நவ 10, 2024 01:29 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, தனி சன்னிதியில் பூதத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் ஆழ்வார்களாக விளங்கியவர்களில் ஒருவரான இவர், கோவில் அருகே உள்ள நந்தவனத்தில், குருக்கத்தி மலரில் திருமாலின் கதாயுத அம்சமாக, ஐப்பசி மாத அவிட்ட நட்சத்திர நாளில் தோன்றினார்.
நேற்று, அவரது ஜெயந்தி நாளை முன்னிட்டு, கடந்த அக்., 31ம் தேதி முதல், தினமும் திருமஞ்சனம், பிற சேவைகள் கண்டு வீதியுலா சென்றார்.
நேற்று முன்தினம் திருத்தேரில் உலா வந்தார். பின், இரவு வீதியுலா நடந்தது. அவதார ஜெயந்தி நாளான நேற்று, கோவிலில் ரத்தின அங்கி சேவையாற்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்தலசயன பெருமாள் உள்ளிட்ட சுவாமியர், அவருக்கு மங்களாசாசனம் செய்தனர்.
பெருமாள் கைத்தல சேவையாற்றினார். தொல்லியல் வளாகத்தில் உள்ள ஆதிவராக பெருமாள் கோவில் மங்களாசாசனத்தை தொடர்ந்து, மாலை அவதார ஸ்தல நந்தவனத்தில் எழுந்தருளி, திருமஞ்சன வழிபாடு கண்டார். இரவு, ஸ்சதலசயன பெருமாளுடன் வீதியுலா சென்றார். இன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது.