/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம் நிறைவு
/
மாமல்லையில் பூதத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம் நிறைவு
ADDED : நவ 10, 2024 07:25 PM
மாமல்லபுரம்:பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்களாக சிறப்பு பெற்றவர்களில், பூதத்தாழ்வார் ஒருவர். மாமல்லபுரத்தில் உள்ள நந்தவன குருக்கத்தி மலரில், திருமாலின் கதாயுத அம்சமாக, ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில் தோன்றினார். இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதி கொண்டுள்ளார்.
அவரது அவதார ஜெயந்தி உற்சவம், கோவிலில், கடந்த அக்., 31ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. தினசரி திருமஞ்சனம், சேவைகள் வழிபாட்டுடன், வீதியுலா சென்றார்.
கடந்த 8ம் தேதி திருத்தேரில் உலா சென்று, நேற்று முன்தினம் அவதார ஜெயந்தி உற்சவம் கண்டார். நேற்று மாலை, அவருக்கு விடையாற்றி திருமஞ்சன வழிபாட்டுடன் உற்சவம் நிறைவுபெற்றது.
ஐப்பசி சதய நட்சத்திர நாளான நேற்று, இந்நாளில் அவதரித்த பேயாழ்வாரும், சாற்றுமறை உற்சவம் கண்டார்.