/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் மாயமானவர் உடல் கரை ஒதுங்கியது
/
கடலில் மாயமானவர் உடல் கரை ஒதுங்கியது
ADDED : ஜன 30, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:கர்நாடக மாநிலம், மல்லுார் தாலுகா, புராலம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மகன், நவீன், 21. கடந்த 27ம் தேதி, மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் வழிபட, குழுவினருடன் வந்தார்.
அங்கு செல்லும் முன், அன்று காலை மாமல்லபுரம் கடலில் குளித்த போது, அலையில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மறுநாள் இரவு அதே பகுதியில், அவரது உடல் கரை ஒதுங்கியது.
உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

