ADDED : ஜன 16, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தை சேர்ந்தவர் பப்பி அம்மாள், 57. அனுமந்தபுத்தேரி பகுதியில் வசித்து வருகிறார். வீட்டை பூட்டி இருந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் பப்பி அம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அளித்த புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 சவரன் நகைகள் மற்றும் 30,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.