/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து எருமைகள் பரிதாப பலி
/
மின்சாரம் பாய்ந்து எருமைகள் பரிதாப பலி
ADDED : ஆக 12, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், இரண்டு எருமைகள் உயிரிழந்தன.
சென்னை, சேலையூர் அடுத்த ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சரளா, 47; பால் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, தன் இரண்டு எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால், உறவினர்களுடன் சென்று, இரவு முழுதும் தேடினார்.
இந்த நிலையில், ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், இரண்டு எருமைகளும் உயிரிழந்தது, நேற்று காலை தெரிய வந்தது. இதுகுறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.