/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீக்காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
/
தீக்காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜன 08, 2025 07:44 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி.39. இவரது மகள் ஐஸ்வர்யா,3.
கடந்த டிச., 13ம் தேதி இரவு ஐஸ்வர்யா, அங்குள்ள வெங்கடேசன் என்பவர் வீட்டு வாசலில் ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கை கவனிக்காமல், அதன் அருகே சென்றுள்ளார்.
அப்போது, சிறுமியின் ஆடையில் தீப்பற்றி, உடல் முழுதும் தீ பரவி பலத்த காயமடைந்தார்.
உடனே அங்கிருந்தோர் சிறுமியை மீட்டு, அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி ஐஸ்வர்யா இறந்தார். இதுகுறித்து, காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

