/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்
/
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்
ADDED : டிச 14, 2024 11:59 PM

மறைமலைநகர்:விழுப்புரத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த சீனிவாசன், 52, என்பவர் பேருந்தை ஓட்டினார்.
மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சிக்னல் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் மீது மோதியது.
இதில், இரண்டு கார்களின் பின்புறமும் உருக்குலைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போலீசார், அரசு பேருந்து டிரைவர் சீனிவாசன் மற்றும் நடத்துனர் முபாரக், 45, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.