/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 06, 2025 07:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும், குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 85 அங்கன்வாடி பணியாளர்கள், இரண்டு குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது.
இதுற்கான விண்ணப்பங்களை (www.icdstndov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுபவர்கள், 12 மாதங்கள் பணி முடித்தபின். அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பித்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின், நகல்கள் இணைக்க வேண்டும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்கள் இணைக்க வேண்டும். நேர்காணலின்போது, அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.