/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
/
உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 05, 2025 09:15 PM
செங்கல்பட்டு:அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தொழிற்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனம், தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியரில், 2024- 25ம் ஆண்டு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி (https;//umistn,gov,in.officer) என்ற இணையதளத்தின் மூலம், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.