sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நவீன சலவையகம் அமைக்க அழைப்பு

/

நவீன சலவையகம் அமைக்க அழைப்பு

நவீன சலவையகம் அமைக்க அழைப்பு

நவீன சலவையகம் அமைக்க அழைப்பு


ADDED : அக் 21, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: நவீன சலவையகம் அமைக்க, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தெரிவித்தார்.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள். சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின், பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க, தமிழக அரசு நிதி உதவியுடன், புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .

நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us